நல்லவன் கெட்டவன் கேடுகெட்டவன்.
ஏழை பணக்காரன் கோடீஸ்வரன்.
எவனாக இருந்தாலும் ஒரே நீதி
மரணத்தின் முன் மட்டுமே.
1 of 10
ஆடாத ஆட்டம் எல்லாம்
ஆடியே நாம் தீர்த்தாலும்.
ஒரு நாள் அடங்கிப் போகும்
நம் ஆட்டம் அனைத்தும்.
அது தான் நம் மரணம்.
2 of 10
தன்னை வெல்ல யாரும் இல்லை
என்ற அகந்தையில் வாழ்ந்தவரும்
வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும்
தருணம் அது தான் “மரணம்”.
3 of 10
..::மரணதேவன்::..
மனிதன் மனிதனை அன்பு பாசம் வேசம்
துரோகம் கொண்டு வென்றாலும்,
அவன் வரும் போது இவன்
நாடகம் ஏதும் பலிப்பது இல்லை.
8 of 10
மூச்சை இழுக்க மறந்தால் ‘மரணம்’.
இழுத்த மூச்சை விட மறந்தால் ‘மரணம்’.
அவ்வளவு தான் “வாழ்க்கை”…!
9 of 10
10 of 10
கொடுத்தவன் எவனோ
எடுத்தவனும் அவனே.
உயிர் கொடுத்து உடல்
கொடுத்து ஆசைகள்
பல விதைத்து விட்டு,
செடியாகி மரமாகி
காயாகி கனியாகும் முன்
எடுப்பதை என்ன சொல்வது.
“கொடுத்தவன் கெடுத்தான்
கெடுத்தவன் எடுத்தான்”.








