Tamil Quotes About Love
வானத்தில் நட்சத்திரங்கள் பல இருக்கலாம்!
பூமியில் பூக்கள் பல இருக்கலாம்!
இதயத்தில் ஒருவர் தான் இருக்க வேண்டும்!
அதற்கு பெயர்தான் உண்மையான காதல்.
Tamil Quotes For Love | Kangal Kavithaigal | Tamil Quotes For Lovers | Tamil Kavithai For Couples | Tamil Kavithai For Wife
நீ அழகு தான். ஆனால், உன்னை
வர்ணிக்க வார்த்தைகள்
இல்லை என்னிடம்.
காரணம்: வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாத அழகி அடி நீ எனக்கு.
உன் கரம் வேண்டும் என் தலை தடவிட.
உன் மடி வேண்டும் நான் தூங்கிட.
உன் தோள் வேண்டும் நான் சாய்ந்திட.
உன் அன்பு வேண்டும் நான் சிரித்திட.
மொத்தத்தில் நீ வேண்டும் நான் உயிர் வாழ்ந்திட.
பழகிய மூன்று தினங்களில்
உன் வாழ்க்கை மொத்தத்தையும்
என்னிடம் பகிர்கிறாயே!
ஒரு வேளை பூர்வ ஜென்ம பந்தம்
என்று நினைத்தாயோ!
மனம் கனமாகும் போதும்,
ரணமாகும் போதும்.
உன் நினைவுகள் தான்
என் இதயத்தை இதமாக
வருடிச் செல்கிறது.
என் கற்பனை காதலியே.
என் காதல் பற்றி பக்கம் பக்கமாக
கவிதை எழுத தெரிந்த எனக்கு,
அதை ஒற்றை வரியில் சொல்ல
தைரியம் இல்லாமல் போய்விட்டது.
காதல் கவிதைகள்
உன் கண்களுக்குள் கத்தியை வைத்து,
என்னை போன்றவர்களின் இதயத்தை,
குத்தி கிழிக்க பிரம்மன்
உன்னை அனுப்பி விட்டான் போலும்.
எண்ணங்கள் வண்ணங்கள் ஆகும்.
கற்பனைகள் கவிதை ஆகும்.
வெற்று காகிதம் ஓவியம் ஆகும்.
கல்லும் சிற்ப்பம் ஆகும்.
சிந்தையில் ஒருத்தி சித்திரமாகும் போது.
என் கவிதைக்கு அர்த்தம் கேட்பவளே.
என் கவிதையும் நீயே,
அது தரும் அர்த்தமும் நீயே.
என் வாழ்க்கையும் நீயே,
அதன் அர்த்தமும் நீயே.
எனது பெருந்துயரங்கள் அனைத்தும்,
காதல் என்ற காகிதத்தில்,
காதலி என்ற பேனாவால்,
அன்பை மையாக கொண்டு,
கவிதைகளாக வடிக்கப் படுகிறது.
எப்படி? எப்பாேது? என்னை
கண்டுபிடித்தாய் என்றாள் என் காதலி.
என் இதயம் உன்னை நினைத்து
தொலைந்த போது என்றேன் நான்.
🌏காலம் மாறலாம்🌏.
🤔கனவு மாறலாம்🤔.
🌹ஆசை மாறலாம்🌹.
ஆனால்,
💃உன்மீது நான்🚶
💘கொண்ட காதல்💘,
என்றும் மாறாது
💕மறையாது💕
💃என் இனியவளே💃.
உன் வார்த்தைகள் கவிதையானது.
உன் பேச்சுக்கள் பாடலானது.
உன் வலையோசை இசையானது.
என் அவளே என் இனியவளே!
இனி நீ என்றும் என் அவளே!
போர்வாளை விட கூர்வாள் உன் கண்கள்.
என் இதயத்தை தினம் குத்தி கிழிக்கிறது.
தவிற்க்க நினைத்தால் தடுக்கிறது மனம்.
பார்க்க நினைத்தால் பதறுகிறது இதயம்.
தீட்டிய கத்தியை
கூட எளிதாக
எதிர்கொள்வேன்,
மை தீட்டி தீண்டும்
உன் பார்வையை
எதிர்கொள்ள
தடுமாறுகிறேன்.
என் அன்பே…!
தொலைந்தெங்கும் போய்விடவில்லை!
தொடர்பில் தான் இருக்கிறோம்!
நீ சுவாசிக்கும் காற்றில் நானும்!
நான் சுவாசிக்கும் காற்றில் நீயுமாய்!
நமக்கென்று தனி உலகம் வேண்டும்.
அங்கு உனக்காக நானும்,
எனக்காக நீயும்,
எந்த எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் இல்லாமல்,
தீராத காதலுடன் மகிழ்ச்சி மட்டுமே
வாழ்க்கை என கொண்டு வாழ்ந்திட வேண்டும்.
Tamil Funny Love Quotes
அன்று உன்னை ரேஷன் கடையில்
கண்டபோதே தோன்றியது.
உன்னை எப்படியாவது என் ரேஷன்
கார்டில் சேர்த்து விட வேண்டும் என்று.