74+ வாழ்க்கை கவிதைகள் – Life Quotes In Tamil

உன்னை புரிந்தவர்களுக்கு
நல்ல பதிலாய் இரு.
உன்னை புரியாதவர்களுக்கு
புதிராகவே இருந்து விடு.

Life quote Tamil

வருகிறபோது:
நல்லது ஆமை வேகத்தில் வருகிறது.
கெட்டது புல்லட் வேகத்தில் வருகிறது.
போகிறபோது:
கெட்டது ஆமை வேகத்தில் போகிறது.
நல்லது புல்லட் வேகத்தில் போகிறது.
என்ன வாழ்க்கை டா இது.

Valkkai kavithai image


குறை சொல்ல வந்தவர் பாதி.
நிறை அள்ள வந்தவர் மீதி.
உதவ யாரும் இல்லை இங்கு.

Sad life quote tamil

அனுபவங்கள் அதிகரிக்க அதிகரிக்க,
உதடுகளில் மௌனம் தானாக
வந்துவிடுகிறது.

Mounam kavithai


யாரோ ஒருவனின் விமர்சனத்துக்கு
உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே.
நீ தோற்றால் பைத்தியக்காரன் என்பான்.
நீ வெற்றி பெற்றால் அதிர்ஷ்டசாலி என்பான்.
அவனைக் கண்டுகொள்ள தேவை இல்லை.
அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.

Tamil quote for life

நிமிர்ந்து நிற்பது பலமும் அல்ல,
வளைந்து கொடுப்பது பலவீனமும் அல்ல,
நிமிர்ந்து நிற்கும் வேலைவிட,
வளைந்து கொடுக்கும் வில் அம்பு
பாயும் தூரம் அதிகம்🏹.

Tamil life quote


கோபத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.
கோபம் நம்மை கட்டுப்படுத்தினால்
ஆபத்து நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு
மட்டும் அல்ல, நமக்கும் தான்.

Kobam tamil quote

இளமையில் இருக்க கூடாத இரு
விசயங்கள்: 👉கோபம் 👉சோம்பல்.
முதுமையில் இருக்கக்கூடாத இரு
விசயங்கள்: 👉தனிமை 👉கடன்.

Tamil life quote


முன்பு எதற்கெல்லாம் கோபம் வந்ததோ,
இப்போது அதை எல்லாம் சிரித்து
கடக்க பழகி விட்டது மனம்.
விரக்தியா பக்குவமா என்று தான் தெரியவில்லை.

Tamil life quote


நமக்கான
மரியாதையை
பல நேரங்களில்
பல இடங்களில்
தீர்மானிப்பது
நம்மிடம் இருக்கும்
பணம் தான்.

Panam tamil quote

குளத்தை கலக்குவது
அனைவராலும் முடியும்.
அதை தெளிய செய்வது
குளத்தால் மட்டுமே முடியும்.
நம் மனமும் அப்படித்தான்💗.

Tamil quote


அடிமைப் படுத்தா அன்புகள்!
கனம் தரா காலங்கள்!
ரணம் தரா ரசிப்புகள்!
வதம் செய்யா வார்த்தைகள்!
கள்ளமில்லா கருவிழிப் பார்வைகள்!
தொல்லை தரா தோள் சாய்ப்புகள்!
நெருடலில்லா நினைவுகள்!
பாசாங்கில்லா பாசங்கள்!
கிடைக்கப் பெறுதல் பேரழகே…!

Anbu tamil life quote

Leave a Comment