உன்னோடு சேர்ந்தே
இந்த உலகை ரசித்திட ஆசை.
உன் பூ கரம் பிடித்தே
இந்த உலகை சுற்றிட ஆசை.
உன் இன் முகம் பார்த்தே
அந்த நிலவை ரசித்திட ஆசை.
உன் மடி சாய்ந்தே
என்னை மறந்திட ஆசை💕💘.
Kadhal Kavithaigal
கண்கள் இமைக்க மறக்கிறது.
இதயம் விரிந்து சுருங்குகிறது.
யார் எண்ணையோ
கைபேசியில் தேடும் போது.
உன் எண்ணை கண்டதும்.
என் இதய கதவுகள் உனக்காக திறந்தேயுள்ளது.
என் விழி வீட்டினுள் நுழைந்துவிடு.
ஏற்கனவே நுழைந்து விட்டாய்,
உன் சம்மதம் இன்றி என் விழி வீட்டில்.
நீ சம்மதம் தருவாயா.?
கனவுலகில் நாம் இணைந்தே பயணிக்கலாம்.
எனக்கு அப்படி வாழ வேண்டும்
இப்படி வாழ வேண்டும் என்ற
ஆசை எல்லாம் இல்லை.
ஒற்றை ஆசை தான்! வாழ்ந்தால்!
உன்னோடு வாழ வேண்டும்💕…!
எல்லை கடந்த பயங்கரவாதம்
உன் கண்கள் செய்கிறதே.
தொல்லை கொடுத்து,
தூக்கம் துரத்தி, என் உயிரை
மெதுவாய் கொய்கிறதே.
இரும்பு சிறையில் இருந்துகூட
எளிதில் தப்பி விடுவேன்.
ஆனால் அவள் விழி சிறையில்
இருந்து தப்பிக்க முடியவில்லை.
தமிழ் காதல் கவிதைகள்
காதல் என்னும் கடலில் கரை
அறியாது தத்தளிக்கிறேன்.
என் அன்பு காதலியே கலங்கரை
விளக்காக கரை சேர வழிகாட்டு!
கண்ணில் தெரியும் நவரசம்.
கைகள் பிடிக்கும் அபிநயம்.
இதழில் ஊறுது கனிரசம்.
ஏனடி நடையில் அவசரம்.
வேண்டும் உன் மலர் கரம்.
பெற்றிடத்தானே என் தவம்.
பெண்களுக்கு அழகு வீரமாம்!
அது எப்படி சாத்தியமாகும்?
உன் கண்கள் என்னும் தூண்டில்
விழுந்து விட்டால்!
மாவீரனும் மண்டியிட்டு தானே
ஆகவேண்டும்!
அதென்னவோ தெரியவில்லை!
உன்னைக் காணாத போது
சொல்லுவதற்கு காவியம் படைக்கிறேன்.
கண்டுவிட்டால் தமிழின் முதல் எழுத்தும் மறக்கிறேன்!














