120+ தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் – Kadhal Kavithaigal Images [2025]

வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்கள் அன்பான வரவேற்பு!
“Kadhal Kavithaigal” தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, இங்கு நாங்கள் அழகான மனதோடு உருவாக்கப்பட்ட தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் தொகுப்பை பகிர்கிறோம். காதலின் மென்மையும், ஆழ்ந்த உணர்வுகளும் படங்களில் வார்த்தைகளுடன் கலந்துள்ள இந்த images உங்கள் மனதை நெகிழச் செய்யும்.

இந்த உணர்வுப்பூர்வமான love image தொகுப்பில் காணலாம்: Love Quotes Images in Tamil, Kadhal Kavithai Photos, Whatsapp Love Kavithai Images, Romantic Tamil Kavithai, Emotional Kadhal Lines in Tamil, Heart Touching Tamil Kadhal Kavithaigal, மற்றும் True Love Kavithai Images. இந்த படங்களை பகிர்ந்து உங்கள் காதலை அழகாக வெளிப்படுத்துங்கள்.

தமிழ் காதல் கவிதைகள் இமேஜ்

 

படைத்தவனே வியந்திருப்பான் போலும்!
அதனால் தான் என்னவோ
கண்திருஷ்டி படும் என்று எண்ணி
உன் உதட்டின் ஓரத்தில் மை வைத்து
அனுப்பி இருக்கிறான்…!

 

1 of 20

 

 

 

நான் இலக்கணம் தெரிந்து கவிதை
எழுதவில்லை என்றாலும் எழுதுகிறேன்.
நான் நம்புவது இலக்கணத்தை
அல்ல உன் அழகை…!

 

2 of 20
Kadhal Kavithaigal Images

 

 

நான் கவிதை எழுத, நிலவோ,
இரவோ, மலரோ தேவை இல்லை.
நீ அசைந்தால் போதும்.
உன் கண் அசைந்தால் போதும்…!

 

3 of 20
Kavithai for girlfriend

 

 

கவியொன்று வரைகிறேன் உனக்காக!
அதைக் கேட்டு நீயும் வர
வேண்டும் எனக்காக!
என் கவியே!

 

4 of 20
Tamil love kavithai

 

 

நீ மையிட்டுக் கொள்கிறாய்
உன் கண்களுக்கு…!
நானும் மையிட்டுக் கொள்கிறேன்
என் பேனாவிற்கு…!
உன் மையிட்ட கண்கள் கவிதைகள்
பல கொடுக்கும் என்பதால்…!

 

5 of 20
Kavithai image

 

 

நீ பார்த்து கொண்டே இரு.
நான் படித்து கொண்டே இருக்கிறேன்.
உன் விழிகளில் என் கவிதைகளை.

 

6 of 20
Eye kavithai image

 

 

நீ வண்ண கோலங்கள் அலங்கரித்துக்
கொண்டு இருக்க,
நான் என் எண்ண கோலங்களால் உன்னை
வர்ணித்துக் கொண்டு இருக்கிறேன்.
என் கவிதையின் கவியே…!

 

7 of 20
Kolam kavithai image

 

Kadhal Kavithaigal Images

மழையில் நீ நனைந்தாய் என்று
சொல்வதை விட,
உன் அழகில் மழை நனைந்தது.
என்பது தான் சரியாக இருக்கும்.

 

8 of 20
Malai kavithai

 

 

உன்னை கண்டதும் தேன் கூட்டை
மறந்த தேனி போல்
தடுமாறுகிறது என் கண்கள்…!

 

9 of 20
காதல் கவிதை

 

 

மழையும் இல்லை, மழை சாரலும் இல்லை.
ஆனாலும் நான் நனைந்து போகிறேன்,
உன்னை கண்டதும். அங்கேயே நின்று விடு.
கிட்ட வந்தால் இதயம் வெடித்தாலும் வெடிக்கும்.

 

10 of 20
Kadhal kavithai

 

Tamil Kadhal Kavithaigal

 

 

இரவின் அழகை ரசிக்க
இரு கண்கள் போதாது.
உன்னுடன் நான் இருந்து
ரசிக்கும் இரவுகளுக்கு.
ஜென்மம் ஒன்று போதாது.

 

11 of 20
Tamil love quote

 

 

என் மனதில் என் கனவில்
என் நினைவில் என் அன்பில்
இன்றும் என்றும் என்றென்றும்
நீ மட்டுமே உயிரே…! ஐ லவ் யூ…!

 

12 of 20
I love u tamil quote

 

 

உயிரின்றி உடல் வாழ முடியுமென்றால்.
காற்றின்றி சுவாசிக்க முடியுமென்றால்.
வானமின்றி உதயமொன்று நிகழுமென்றால்.
நீயின்றி நானும் வாழ்வேன்…!

 

13 of 20
Love quote tamil

 

 

கொஞ்சம் பேசு கெஞ்சி பேசு,
கொஞ்சி கொஞ்சி, கெஞ்சி பேசு.
பிஞ்சு மனம் பஞ்சு குணம்,
முத்தத்தீயில் மொத்தமும் எரியட்டும்.

 

14 of 20
Muttham kavithai

 

 

திருடு போன இதயம் திருடு போன
பின் தான் திருடனை அறிந்து கொள்ளும்.
திருட்டு தவறு தான் என்றாலும்,
அந்த திருடனையே ஏற்றுக்கொள்ளும்.
இது தான் காதல் திருட்டு…!

 

15 of 20
Kadhal thiruttu

 

 

கன்னி உன் அழகினில் கதி கலங்கி நிற்கிறேன்.
கனவினில் நான் கண்ட தேவதை நீ தானோ…!
கட்டழகி உன் மீது காதல் மொழி வீசி
கரங்கள் கோர்த்து கடைசி வரை
காலம் கடக்க கடவுளின் காலடியில்
கை கூப்பி நிற்கிறேன்…!

 

16 of 20
Kadhal kadavul quote

 

 

இருண்ட வானத்தை
ஒளிர செய்தது வெண்ணிலவு.
என் இருண்ட வாழ்வை ஒளிர
செய்தது இந்த பெண்ணிலவு.!

 

17 of 20
Love quote in tamil

 

 

உதடுகள் பேச தயங்கும் வார்த்தைகளை,
விழிகள் பார்த்து விழிகள்
புரிந்து கொள்ளும் உன்னத உறவே காதல்.

 

18 of 20
Understanding love kavithai

 

 

அரை நொடி வந்து போனாலும்,
நச் என்று தந்து போகிறாய் அன்பே.
உன் அன்பு முத்தத்தை என் கனவில்!

 

19 of 20
முத்தம் கவிதை

 

 

 

என்னதான் மாயம் செய்தாயோ…!
இரவு என்பதையும் மறந்து இதயம்
இடம் மாறிக் கொண்டே இருக்கிறது.
தினமும் உன் நினைவில்…!

 

20 of 20
Tamil love quote

ஒரு படத்தின் பின்னணி போல, ஒரு வரியும் நம் மனதை கவரக்கூடியது. இந்த தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் – Kadhal Kavithaigal உங்கள் காதலின் உணர்வுகளை அழகாகப் பிரதிபலிக்கும். வார்த்தைகளும், படங்களும் இணைந்தால் காதல் இன்னும் இனிமையாக பரவுகிறது!

Leave a Reply