| Tamil Quotes On Life | வாழ்க்கை சிந்தனைகள் | Quotes In Tamil | Tamil Quotes For Life | வாழ்க்கை தத்துவங்கள் | Life Quotes In Tamil | வாழ்க்கை கவிதைகள் | Valkkai Quotes | Valkkai Thathuvangal |
கடைசி சொட்டு தண்ணீரும் அரிசியும்
தீரும் போது தான் மனிதனுக்கு இதை
உணர்ந்து கொள்ளும் பக்குவம் வரும்.
அன்பு பாசம் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை ஏன்னென்று.
மனிதம் மறித்து விட்டால் மனித இனம் மறித்து விடும்.
1 of 35
பிறர் காயங்களை எளிதில் கடக்கும் நாம்
நம் காயங்களை கடப்பது கடினம்.
வெளி காயங்களை தாங்கும் மனதால்
மன காயங்களை தாங்க முடிவதில்லை.
2 of 35
கஷ்டங்களை நினைத்து
கஷ்டப்படுவதை விட்டுவிட்டு.
கஷ்டங்களை காதலித்து பார்.
உன் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை அது காட்டும்.
3 of 35
சலனம் இல்லாத நீரில்தான்
பிம்பம் தெளிவாக தெரியும்
மனம் அமைதியாக இருந்தால் தான்
புத்தி தெளிவாக இருக்கும்…
4 of 35
சில சந்தர்ப்பங்கள் உன்னை
முட்டாள் ஆக்கலாம் அது பரவாயில்லை..!
ஆனால் அது உன்னை
முடவனாக்கி விடாமல் பார்த்துக்கொள்…!!
5 of 35
நீ உத்தமனாக வாழ வேண்டாம்.
ஆனால், எதற்கும் உதவாதவனாக
மட்டும் வாழ்ந்து விடாதே…!
6 of 35
பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும்
பண முதலைகளுக்கு தெரியாது.
பாசம் என்பது பணத்தை விட
உயர்ந்தது என்று.
7 of 35
எவ்வளவு தான் மேகம் மூடினாலும்
வெளிவரும் நேரம் வரும்போது
நிச்சயம் வெளிவரும் சூரியன்…
அது போல் தான்…!
எவ்வளவு தான் மூடி மறைத்தாலும்.
ஒரு நாள் உண்மை ஆதாரத்துடன் வெளிவரும்…!
8 of 35
சிறிய காரியமாக இருந்தால் சிதறாமல் செய்.
அதுவே பெரிய காரியமாக இருந்தால்
யாரிடமும் சொல்லாமல் செய்.
9 of 35
அந்த காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை.
ஆனால் எல்லோரிடமும் நேரம் இருந்தது.
இந்த காலத்தில் யாரிடமும் நேரம் இல்லை.
ஆனால் எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது.
10 of 35
வாழ்க்கையில் விதியின் சதியால்
பாதிக்கப்பட்டவனும் சோதிக்கப்பட்டவனும்
பாவப்பட்டவன் அல்ல பக்குவப்பட்டவன்.
11 of 35
“அன்பு” விற்கும்
“அம்பு” விற்கும்
“பண்பு” ஒன்றே
12 of 35
கடனாக இருந்தாலும் சரி.
அன்பாக இருந்தாலும் சரி.
திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு..!
13 of 35
உண்மைகளுக்கு கனம் அதிகம்
காற்றில் பரவாது….!
பொய்களுக்கு கனம் குறைவு
காற்றில் பரவிவிடும்….!
14 of 35
பொறுமை ஒருபொழுதும்
தோற்பதில்லை.
பொறாமை ஒருபொழுதும் ஜெயிப்பதில்லை.
15 of 35
பக்குவம் என்பது யாதெனில்.
நீ குணத்தில் சுத்த தங்கமாக இருந்தாலும்.
செம்பு கலக்காத வரை நீ பயன்பாட்டுக்கு
உகந்தவன் இல்லை என்பதை உணர்வதே.
16 of 35
கற்களை சேர்ப்பதில் மும்முரமாக இருந்து
வைரத்தை இழந்து விடாதீர்கள்…
நம்முடன் பலர் இருக்கின்றனர் என்று
உண்மையான ஒருவரை இழந்து விடாதீர்கள்…
17 of 35
வாழ்க்கையில் எதுவுமே நமக்கு மட்டுமல்ல
என்பதை உணர்ந்து கொண்டால்,
சந்தோஷங்கள் மட்டுமல்ல
துக்கங்களும் கொண்டாட்டத்திற்குரியதே.
18 of 35
வாழ்க்கையில் நாம் செய்யும் இரு தவறுகள்.
பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பது.
மௌனமாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவது.
19 of 35
உங்கள் கவலை, துன்பம், ரகசியம் அனைத்தையும் கடவுளிடம் மட்டும் பகிருங்கள். உறவுகளிடம் பகிர்ந்தால், உங்கள் கவலை, துன்பம், ஏமாற்றம் இரட்டிப்பு ஆகக்கூடும்.
20 of 35
உணர்வுகளை மதிக்கத் தெரியாத இடத்தில்
கோபுரமாய் இருப்பதை விட….
உணர்வுகளை மதிக்கத் தெரிந்த இடத்தில்
குப்பையாய் இருப்பதே மேல்….
21 of 35
பாம்பு எத்தனை முறை தோலை உரித்தாலும்
அது எப்போதுமே பாம்பு தான்.
பச்சோந்தி எத்தனை முறை நிறம் மாறினாலும்
அது எப்போதுமே பச்சோந்தி தான்.
துரோகம் துரோகம் தான் ஏமாற்றம் ஏமாற்றம் தான்.
22 of 35
போராடி கிடைத்தது கருவறை..!
தேடலால் கிடைத்தது வகுப்பறை..!
தேடிக் கிடைத்தது மணவறை..!
தேடாமல் கிடைக்கும் கல்லறை..!!
23 of 35
போராடி கிடைத்தது கருவறை..!
தேடலால் கிடைத்தது வகுப்பறை..!
தேடிக் கிடைத்தது மணவறை..!
தேடாமல் கிடைக்கும் கல்லறை..!!
24 of 35
இருக்கும் போது கிடைக்காத நீதியும்.
இறந்த பின் கொடுக்கும் திதியும்.
இறந்த பின் கிடைக்கும் நிதியும்.
இறந்தவருக்கு யாதொரு பயனும் இல்லை.
25 of 35
நாம் கண்மூடித்தனமாய்
நம்பிய உறவுகள்
காயம் தராமல்
கடந்ததில்லை
நம் வாழ்க்கையில்…!
26 of 35
கொடிய மிருகங்கள்
நம்முள்ளேதான் இருக்கின்றது
அதை கட்டுபடுத்த தெரிந்தவர் ஞானி
அதை கட்டவிழ்த்து விடுபவன் மகா பாவி…!
27 of 35
நீ விரும்புவதை செய்வதில்
உன் சுதந்திரம் அடங்கியுள்ளது.
நீ செய்வதை விரும்புவதில்
உன் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.
28 of 35
நாம் செய்த தவறுக்கு கிடைக்காத தண்டனை.
செய்யாத தவறுக்கு கிடைக்கும் போது தான்.
வாழ்க்கையே புரிய ஆரம்பிக்கிறது.
விதி வலியது…!
29 of 35
கஷ்டங்களை தாங்கும் இதயம்
காயங்களை தாங்குவது இல்லை.
வலிகளை தாங்கும் இதயம்
கடுமையான வார்த்தைகளை தாங்குவது இல்லை.
ஏமாற்றத்தை தாங்கும் இதயம்
துரோகத்தை தாங்குவது இல்லை.
30 of 35
முட்டாள் பழி வாங்க துடிப்பான்.
புத்திசாலி மன்னித்து விடுவான்.
அதி புத்திசாலி
அந்த இடத்திலிருந்தே விழகி விடுவான்.
31 of 35
விழுவதற்கு உன் கால்கள் முடிவு செய்தால்.
எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார் செய்.
விழுவது உங்கள் கால்களாக இருந்தால்.
எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்.
32 of 35
ஒருவரின் தேவை அறிந்து
அவர் கேட்காமலே
நீ உதவி செய்வாய் என்றால்.
நீயும் கடவுள் தான்.
33 of 35
சூழ்நிலையால் மாறுகிறவர்
கண்ணீரோடு மன்னிப்புக் கேட்பார்…
சுயநலத்தால் மாறுகிறவர்
கோபத்தோடு தர்க்கம் புரிவார்கள்…!
34 of 35
கஷ்டப்பட்டு வாழனும் என்று வாழாமல்.
நாலு பேருக்கு நல்லது பண்ணி இஷ்டப்பட்டு வாழுங்கள்.
கவலையின் முடுச்சுகள் ஒருபோதும்
மகிழ்ச்சியை கொடுப்பது இல்லை…!
35 of 35
16 வாழ்க்கை கவிதை மேற்கோள்கள்
25 வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள்
உங்களில் ஒருவருக்கு பயன்படும் என்று பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்களும் யாருக்காவது பயன்படும் என்று தோன்றினால் பகிர்ந்து கொள்ளுங்கள் (பிடிச்சிருந்தா மட்டும்).
நன்றி நண்பர்களே.
அடுத்த பதிவில் சந்திப்போம்.
Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.