Tamil Sad Love Quotes
எல்லோருக்குள்ளும் இருக்கிறது. காதலித்த கதையும். காதலித்து காதலிக்காத கதையும்.
நீ என்னை விட்டு பிரிகையில், என் உயிர் மண்ணை விட்டு பிரிவதை உணர்ந்தேன்னடி.
உன் உருவம் காணாமல் என் இதயம் தவித்திடும். உன்னை கனவில் சுமந்து கண்கள் தினம் தேடுவதால் கண்ணீரும் கொஞ்சம் சிந்திடும்.
கனவில் வந்தவளே! என் இதயம் தின்றவளே! என் உயிரை கொன்றவளே! என்னை ரணமாக்கி காணாமல் காற்றோடு காற்றாய் சென்றாயோ!
மனதுக்குள் தினம் மரணம் நிகழ்கிறது.
கட்டிவைத்த காதல் மாளிகை
கலைந்து மாட்டுக் கொட்டகை
ஆகி இருப்பதை காணும் போது,
விளக்கேற்றிட நீ இல்லாததால்.
உடைந்த இதயத்தை ஒட்ட வைக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அன்பு கொண்ட இதயம் உடைந்த பின் தூக்கி எறியவும் முடியாது என்பது.
இறைவா நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்.
அவள் பிரிவின் துயரை என்னை
விட்டு விரட்டி விடு. இல்லை,
என்னை இந்த மண்ணை விட்டு விரட்டிவிடு.
கற்பனையில் உதித்ததே காவியம் ஆகும் போது,
என் கண்முன்னே உதித்து உதிர்ந்த நீ
எனக்கு என்றும் பேசும் காவியமே
என் கவிதைகளாக.
எதிர்பார்த்ததை எல்லாம் எதிர்பாரா
நேரத்தில் வந்து தந்தவள் நீ.
இன்று ஏதிர்பார்த்து நிற்கிறேன்
என்று தெரிந்தும், நான் எதிர்பாராத
ஒன்றை எளிதாக தந்து விட்டு
கடந்து செல்கிறாய்.
“பிரிவு”
காதல் தோல்வி கவிதை ஸ்டேட்டஸ்
சுமக்க முடியாமல் சுமந்து
கொண்டு இருக்கிறது என் மனம்,
நீ தந்த சுமையான சுகங்களை நினைத்து.
மறக்க முடியாமல் மரணித்து
கொண்டு இருக்கிறது என் மனம்,
நீ தந்த மாற்றங்களை நினைத்து.
வழி தெரியாமல் வழி தேடுகிறது
என் மனம், நீ தந்த வலிகளை நினைத்து.
காதல் ஒரு முறை தான் வரும். ஆனால் காதல் செய்தால்: அந்த காதல் தரும் வலியும், அந்த வலி தரும் கண்ணீரும், பலமுறை வந்து செல்லும் போலும்.
உயிருக்கு உயிராக இருப்பேன்
என்று சொன்னாயடி. ஆனால்,
இன்று உணர்வே இல்லாமல்
என்னை ஓரங்கட்டி விட்டாயடி.
என்னுயிரே! என்னை நீ சிகரத்தில் ஏற்றி வைக்கா விட்டாலும் பரவாயில்லை. சிலுவையில் மட்டும் அறைந்து விடாதே அதுபோதும் எனக்கு.
உறவுகளை உதறிவிட்டு வந்தேன் உனக்காக. நீ என்னை உதறிவிட்டு செல்வாய் என்று அறியாமல்.
தோள் தந்து நட்பானாய்! காகிதம் தந்து காதலானாய்! கரம் பற்றி துணையானாய்! வலியை தந்து இது தான் வாழ்க்கை என்கிறாயே இன்று!
உண்மையா நேசித்தவனுக்கு பிரிவு என்பது மரண வலி தான் போலும்.
நான் ஆசை பட்டது உன்னுடன் வாழ. ஆனால் இப்போது வாழ்வதோ, உன் பிரிவு தரும் வலிகளுடனும், உன் மாறாத நினைவுகளுடனும்.
காதலின் வலிமை காதலுடன்
வாழும் போது தெரிவதில்லை.
பிரிந்து வாழும் போது தான்
தெரிகிறது.
வழிதராமல் இடைவிடாது வலிக்கிறது.
காதலில் இருந்த போதும் காதலில் பிரிந்த போதும் உன் நினைவுகள் மறக்க முடியாதது தான். காதலில் இருந்த போது மறுக்க முடியாத ரசிக்க தக்க ரகசியங்களாய்! காதல் பிரிந்த பின் மறக்க முடியாத சகிக்க முடியாத ரணங்களாய்!
சோகம் கவிதை ஸ்டேட்டஸ்
வழிகளை தேடித்தான் செல்கிறேன்.
ஆனால் செல்லும் இடம் எல்லாம்
எனக்கு காத்திருப்பது என்னமோ
வலிகள் மட்டுமே.
சிலர் நம்மை விட்டு பிரிந்தாலும்,
செதுக்கி விட்டு தான் செல்கிறார்கள்.
காலத்தினால் கூட அழிக்க முடியா
ரணங்களை, நம் இதயத்தில்,
நம் ரத்தத்தினால்.
அன்பில் ஏது கலப்படம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் பலர் உணர்த்தி விட்டு சென்று விட்டனர். அன்பிலும் கலப்படம் உண்டு என்று.
நிஜமென்று நம்பி,
நிழலின் கை கோர்த்து,
நிஜமாய் நிழலானது
🚶என்💗வாழ்க்கை💃.
விதியா இல்லை!
நானே எனக்கு செய்த சதியா!
வீதி விளக்கின் கீழ் என் இரவுகள்!t
கவலைகள் மனதில் கனக்க, நினைவுகள் எங்கோ மிதக்க, ரசித்தபடி கடக்கிறேன், எனை மறந்து இயற்க்கையை.