245+ காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaigal [2025]

வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்!
“Tamil Kadhal Kavithaigal” தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, இங்கு நெஞ்சை நெகிழச்செய்யும், காதலின் இனிமையையும் வேதனையையும் ஒரே நேரத்தில் சொல்லும் காதல் கவிதைகள் தொகுப்பை வழங்குகிறோம். உணர்வுகளால் நிரம்பிய இந்த வரிகள் உங்கள் காதலின் உண்மையைப் பேசும்.

இந்த அற்புதமான கவிதைத் தொகுப்பில் காணலாம்: Love Quotes in Tamil, Romantic Kavithai in Tamil, Kadhal SMS in Tamil, Whatsapp Love Status in Tamil, Emotional Love Lines in Tamil, True Love Messages in Tamil, மற்றும் Heart Touching Tamil Kadhal Kavithai. உங்கள் காதலை வார்த்தைகளில் சொல்ல இதைவிட நெருக்கமான ஒன்றே இல்லை.

Tamil Kadhal Kavithaigal  

 

பொல்லாத நிலவொன்று என் முன்னே வந்தது.
பொய் பேசா என்னையும் பொய் பேச வைத்தது.
மை இட்ட கண்களால் என்னை வீழ்த்தி,
கவி அறியா என்னையும் கவி அளக்க வைத்தது.

 

 

1 of 25
Tamil Kadhal Kavithaigal
 

 

 

 

உன் அன்புக்கு அடிமையாக,
ஆசை தீரா காதலுடன்,
மோகம் குறையா காமத்துடன்
ஆயுள் வரை உன் கரம் பற்றி
வாழ்ந்திட ஆசையடி எனக்கு.

 

 

2 of 25
Tamil romantic kavithai
 

 

 

 

மரண கிணற்றில் சுற்றும் பைக்கைப்போல்,
உன் மரண கண்களில் சுற்றி கொண்டு இருக்கிறேன்.
அணைப்பாயா இல்லை ஆறுதல் சொல்வாயா…?
விடை கொடுப்பாயா இல்லை விலகி செல்வாயா…?

 

 

3 of 25
Love Kavithai in Tamil
 

 

 

 

 

வெட்ட போவது என்னவோ என்னைத்தான்.
இருந்தும் தலை ஆட்டி கொண்டே வருவேன்.
வெட்டுவது உன் விழியால் என்பதால்…!

 

 

4 of 25
காதல் கவிதை
 

 

 

 

என் கண்களில் உள்ள காதலை
நீ புரிந்து கொள்ளவில்லை தான்.
இருந்தும் என் காதல் குறையவில்லை.
காதலித்து கொண்டே இருக்கிறேன் கனவினில்.

 

 

5 of 25
Kadhal Kavithai Tamil
 

காதல் கவிதைகள்

 

நீ எந்தன் உயர் அல்லவா!
உயிர் பிரிந்து உடல் மட்டும்
வாழ்தல் தகுமோ💃💞🚶…!

 

 

6 of 25
Tamil Kadhal kavithai
 

 

 

 

என்னை அழகாக்க
உன் நினைவு வேண்டும்.
என் வாழ்க்கையை அழகாக்க
நீ வேண்டும்.

 

 

7 of 25
Kadhal ninaiv kavithai
 

 

 

 

வருடங்கள் பல கடந்து வயதான பின்,
நீ வந்து என்னை சந்தித்தாலும்,
அறிமுகம் இன்றி அறிந்திடுவேன்
நீ தான் என்று.
உன்னை பதித்து வைக்க வில்லை
பொரித்து வைத்திருக்கிறேன் இதய சுவட்டில்.

 

 

8 of 25
Tamil Love Quotes
 

 

 

 

கடவுள் உன்னை யோசித்து வடித்தானோ!
இல்லை நேசித்து வடித்தானோ!
இப்படி ஒரு அழகு கவிதையை
படைத்து அனுப்பி விட்டான் எனக்காய்.

 

 

9 of 25
Romantic Kavithai in Tamil
 

 

 

 

உலகத்தை பார்க்க
பயன்படும் கண்கள்,
உனக்கு மட்டும்
உலகத்தை மயக்க
பயன்படுகிறது…!

 

 

10 of 25
Kangal Kadhal kavithai
 

 

 

 

பார்வையால் கொன்றது நீ.
ஆயுள் கைதி ஆனது நான்.
தவறு செய்தது நீ!
தண்டனை அனுபவிப்பது நான்!

 

 

11 of 25
Parvai kavithai
 

 

 

 

கண்களால் எனை கடத்தி சென்றாய்.
வசியம் செய்து இதயம் தின்றாய்.
என் இதயம் உன்னிடம் அகதியாய்.
நான் உன் காதலிடம் கைதியாய்.

 

 

12 of 25
Tamil kadhal kavithai
 

 

 

 

கண்கள் பேசுவதும்,
இதழ்கள் பேசுவதும்,
உன்னிடம் மட்டும் தான்.
இதயம் பேசு துடிப்பதும்
உன்னிடம் மட்டும் தான்.

 

 

13 of 25
Heart Touching Love Quotes Tamil
 

 

 

 

உன் விழியின் வெளிச்சத்தில்
வீழ்ந்து விட்ட விட்டில் பூச்சி அடி நான்.
எழுந்து விட நினைக்கும் போதெல்லாம்
மீண்டும் வீழ்ந்து போகிறேனடி.
உன் விழியழகில்…!

 

 

14 of 25
Kadhal Kavithaigal for Lovers
 

 

 

 

விழி திறந்து பார்க்கின்றாய்.
வழி தெரியாத குருடனாய் நிற்க்கின்றேன்.
விலகி கொஞ்சம் நில்லடி,
இல்லை வீழ்ந்து விடுவேன் நானடி.

 

 

15 of 25
Tamil Love Poems
 

 

 

 

பேசும் உன் விழி கண்டு.
என் வாய் பேச மறந்ததடி.
ஓரிரு வார்த்தை ஏனும்
பேசி விட்டு செல்லடி.

 

 

16 of 25
Emotional Love Kavithai Tamil
 

 

 

 

 

 

 

கனவில் வந்த தேவதையே!
கனவு கலைந்த உடன் நீயும்
கலைந்து சென்றதன்
காரணம் தான் என்னவோ..!

 

 

17 of 25
Tamil Romantic Quotes
 

 

 

 

உன்னை நேசிக்க,
உன்னை வாசிக்க,
உன்னையே சுவாசிக்க
ஒரு வரம் தா அல்லது
அதேபோல் ஒரு
சாபம் தா…!
வாழ்ந்து விடுவேன்
ஜென்மம் முழுவதும்
சந்தோஷமாக…!

 

 

18 of 25
Kadhal kavithaigl
 

 

 

 

உன் சிறு நிராகரிப்பைக் கூட
இதயம் தாங்குவதில்லை.
உன் உயிரை என் உயிரை விட
அதிகம் நேசித்த காரணத்தால்.

 

 

19 of 25
Tamil love quote
 

 

 

 

என் வாழ்க்கை எனது தான்.
இருந்தாலும்,
அதில் நான் கழித்த நாட்கள்
அத்தனையும் உனது தான்.

 

 

20 of 25
Tamil Kadhal Kavithai image
 

 

 

 

நீ என்னுடன் பேசும் பொழுதுகளில்
நேரம் போதாமல் இருக்கிறது.
நீ பேசாத நொடிகளில் நேரம்
போகாமல் இருக்கிறது…!💃💖🚶

 

 

21 of 25
காதல் ஸ்டேட்டஸ்
 

 

 

 

மலரும் போது பூக்கள் அழகு.🌺
ஒளிரும் போது நிலவு அழகு.🌜
என் அன்பை நீ உணரும் போது
நம் காதல் அழகு.💖 உன்னோடு
நான் உனகாகத் தான் நான்.💞💞

 

 

22 of 25
Tamil love status image
 

 

 

 

சற்றும் எதிர்பார்க்கவில்லை,
இரவோடு இரவாய் என் மனதை
நீ இரவலாக என்னிடம் இருந்து
தட்டி பறித்து செல்வாயென்று.💕

 

 

23 of 25
Tamil love quote
 

 

 

 

ஆயுதம் ஏந்தி எனை கொன்று செல்.
ஆனால்,
மௌனத்தால் சித்திரவதை செய்யாதே.

 

 

24 of 25
Love quote in tamil
 

 

 

 

உணர்வின்றி கிடக்கிறேன்.
உணர்வூட்ட உனை அழைக்கிறேன்.
அதை கவிதையாய் வடிக்கிறேன்.
பதில் சொல்வாயோ! இல்லை,
பறந்து செல்வாயோ!

 

 

25 of 25
Kadhal Kavithai image

 

 

காதல் என்பது உணர்வுகளின் நதி. அது சொற்களால் அல்ல, மனதால் புரியப்படும். இந்த காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaigal உங்கள் இதயத்தில் ஒலி செய்யும் இனிமையான வரிகளாக இருக்கும். உண்மையான காதலை வார்த்தைகளில் சொல்ல முயற்சிக்கிற இந்த கவிதைகள் உங்கள் மனதை நிச்சயம் வருடும்!

 

Leave a Reply