231+ காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaikal [2025]

வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
“Tamil Kadhal Kavithaikal” தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, இங்கே நம்மை நெகிழச் செய்யும், காதலின் உணர்வுகளை அழகாக வார்த்தைகளில் சொல்லும் காதல் கவிதைகள் காத்திருக்கின்றன. இந்த வரிகள் உங்கள் இதயத்துடன் நேரடியாக பேசும் உணர்வுகளால் நிரம்பியவை.

இந்த இனிமையான தொகுப்பில் நீங்கள் காணலாம்: Love Quotes in Tamil, Romantic Kadhal Kavithai, Whatsapp Love Status in Tamil, Emotional Love Lines in Tamil, Kadhal SMS in Tamil, True Love Messages in Tamil, மற்றும் Heart Touching Tamil Kadhal Kavithaikal. உங்கள் காதலைப் பகிர நெஞ்சை உருக்கும் வார்த்தைகள் இங்கே உள்ளது.

Tamil Kadhal Kavithaikal

 

சொல்லத் துடிக்கும் உதடுகளுக்கும்.
சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும்
இடைப்பட்ட உணர்வே காதல்..!

 

Tamil Kadhal Kavithaikal

 

 

வானத்தில் நட்சத்திரங்கள் பல இருக்கலாம்!
பூமியில் பூக்கள் பல இருக்கலாம்!
இதயத்தில் ஒருவர் தான் இருக்க வேண்டும்!
அதற்கு பெயர்தான் உண்மையான காதல்.

 

Tamil Kavithai about love

 

Tamil Quotes For Love | Kangal Kavithaigal | Tamil Quotes For Lovers | Tamil Kavithai For Couples | Tamil Kavithai For Wife

 

 

நீ நினைப்பது போல் என் கவிதை
எல்லாம் கற்பனை அல்ல நிஜம்.
ஒவ்வொரு கவிதையிலும்
நீ ஒழிந்திருக்கிறாய்.

 

Kadhal Kavithai

 

 

 

நீ அழகு தான். ஆனால், உன்னை
வர்ணிக்க வார்த்தைகள்
இல்லை என்னிடம்.
காரணம்: வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாத அழகி அடி நீ எனக்கு.

 

Tami quote for girlfriend

 

 

 

உனக்காக எதையும் விட்டு
கொடுத்து வாழ்வேன்.
எதற்காகவும் உன்னை விட்டு
கொடுத்து வாழ மாட்டேன்.

 

Tamil Kavithai for girlfriend

 

 

 

உன் கரம் வேண்டும் என் தலை தடவிட.
உன் மடி வேண்டும் நான் தூங்கிட.
உன் தோள் வேண்டும் நான்  சாய்ந்திட.
உன் அன்பு வேண்டும் நான் சிரித்திட.
மொத்தத்தில் நீ வேண்டும் நான் உயிர் வாழ்ந்திட.

 

Tamil kadhal kavithai image

 

 

 

பழகிய மூன்று தினங்களில்
உன் வாழ்க்கை மொத்தத்தையும்
என்னிடம் பகிர்கிறாயே!
ஒரு வேளை பூர்வ ஜென்ம பந்தம்
என்று நினைத்தாயோ!

 

Tamil love quote

 

 

 

எங்கு இருக்கிறாய்..?
எப்படி இருக்கிறாய்..? எப்போது வருவாய்..?
வெறும் கேள்விகளாகவே நகர்கிறது வாழ்க்கை.
கேள்விகள் தகர்ந்து விடும் முன் வந்துவிடு.

 

Tamil kavithai waiting for love

 

 

மனம் கனமாகும் போதும்,
ரணமாகும் போதும்.
உன் நினைவுகள் தான்
என் இதயத்தை இதமாக
வருடிச் செல்கிறது.
என் கற்பனை காதலியே.

 

Kadhal Kavithai For singles

 

 

 

என் காதல் பற்றி பக்கம் பக்கமாக
கவிதை எழுத தெரிந்த எனக்கு,
அதை ஒற்றை வரியில் சொல்ல
தைரியம் இல்லாமல் போய்விட்டது.

 

Un told love tamil Kavithai

 

காதல் கவிதைகள்

 

 

உன் விருப்பம் என் விருப்பம்
அறியாமல் நம் கண்கள் காதல்
கொண்டது முதல் சந்திப்பில்.

 

Love tamil quote

 

 

 

உன் கண்களுக்குள் கத்தியை வைத்து,
என்னை போன்றவர்களின் இதயத்தை,
குத்தி கிழிக்க பிரம்மன்
உன்னை அனுப்பி விட்டான் போலும்.

 

 

 

எண்ணங்கள் வண்ணங்கள் ஆகும்.
கற்பனைகள் கவிதை ஆகும்.
வெற்று காகிதம் ஓவியம் ஆகும்.
கல்லும் சிற்ப்பம் ஆகும்.
சிந்தையில் ஒருத்தி சித்திரமாகும் போது.

 

Tamil Kadhal Kavithaikal

 

 

என் கவிதைக்கு அர்த்தம் கேட்பவளே.
என் கவிதையும் நீயே,
அது தரும் அர்த்தமும் நீயே.
என் வாழ்க்கையும் நீயே,
அதன் அர்த்தமும் நீயே.

 

Kavithai kavithai

 

 

தயவு செய்து மொழிகளால் பேசு.
விழிகளால் பேசாதே.
எத்தனை முறை வீழ்வது
உன்னுள் நான்.

 

Tamil Kadhal Kavithaikal

 

 

 

 

எனது பெருந்துயரங்கள் அனைத்தும்,
காதல் என்ற காகிதத்தில்,
காதலி என்ற பேனாவால்,
அன்பை மையாக கொண்டு,
கவிதைகளாக வடிக்கப் படுகிறது.

 

Tamil quote for lover

 

 

எப்படி? எப்பாேது? என்னை
கண்டுபிடித்தாய் என்றாள் என் காதலி.
என் இதயம் உன்னை நினைத்து
தொலைந்த போது என்றேன் நான்.

 

  love tamil Kavithai

 

 

எங்கேயும் எப்போதும்
யாருக்காகவும்
விட்டு கொடுக்க முடியாத
ஓர் உறவு என்றால்
அது நீ மட்டுமே என் உயிரே.

 

Tamil Kadhal Kavithaikal

 

 

🌏காலம் மாறலாம்🌏.
🤔கனவு மாறலாம்🤔.
🌹ஆசை மாறலாம்🌹.
ஆனால்,
💃உன்மீது நான்🚶
💘கொண்ட காதல்💘,
என்றும் மாறாது
💕மறையாது💕
💃என் இனியவளே💃.

 

Tamil Kadhal Kavithaikal

 

 

உன் வார்த்தைகள் கவிதையானது.
உன் பேச்சுக்கள் பாடலானது.
உன் வலையோசை இசையானது.
என் அவளே என் இனியவளே!
இனி நீ என்றும் என் அவளே!

 

Tamil Kavithai for girlfriend

 

 

நீ என்னவோ இயல்பாகத்தான் பார்க்கிறாய்.
நான் தான் மயங்கி விடுகிறேன்.
சுழலும் உன் கருவிழி கண்டு.

 

Kangal kavithai

 

 

நான் யோக்கியன் தான்.
உன் ஓரக்கண் பார்வை
படும் முன்பு வரை…!

 

Tamil quote for girlfriend

 

 

போர்வாளை விட கூர்வாள் உன் கண்கள்.
என் இதயத்தை தினம் குத்தி கிழிக்கிறது.
தவிற்க்க நினைத்தால் தடுக்கிறது மனம்.
பார்க்க நினைத்தால் பதறுகிறது இதயம்.

 

Tamil Kadhal Kavithaikal

 

 

கண்ணே! உன் வாய் பேசும்
கவிதைகளை விட,
உன் கண் பேசும் காவியங்கள்
என்னை மதி மயங்க செய்கிறதே.

 

Tamil love quote for lover

 

 

 

 

தீட்டிய கத்தியை
கூட எளிதாக
எதிர்கொள்வேன்,
மை தீட்டி தீண்டும்
உன் பார்வையை
எதிர்கொள்ள
தடுமாறுகிறேன்.
என் அன்பே…!

 

Tamil love quote for girlfriend

 

 

பேசியே மயக்குவது உன் பழக்கம்.
உன் பேச்சில் மயங்குவது
என் வழக்கம்.

 

Tamil Kavithai for girlfriend

 

 

தொலைந்தெங்கும் போய்விடவில்லை!
தொடர்பில் தான் இருக்கிறோம்!
நீ சுவாசிக்கும் காற்றில் நானும்!
நான் சுவாசிக்கும் காற்றில் நீயுமாய்!

 

Tamil Kadhal Kavithai

 

 

நமக்கென்று தனி உலகம் வேண்டும்.
அங்கு உனக்காக நானும்,
எனக்காக நீயும்,
எந்த எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் இல்லாமல்,
தீராத காதலுடன் மகிழ்ச்சி மட்டுமே
வாழ்க்கை என கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

 

Tamil Kadhal kavithai

 

 

கண்ணே எனக்கு
பொன் மீதும்
மண் மீதும்
வராத பாசம்
பெண் உன்
மீது வந்ததடி.

 

Tamil romantic love quote

 

 

Tamil Funny Love Quotes

 

 

 

 

அன்று உன்னை ரேஷன் கடையில்
கண்டபோதே தோன்றியது.
உன்னை எப்படியாவது என் ரேஷன்
கார்டில் சேர்த்து விட வேண்டும் என்று.

 

Tamil funny love quote

 

 

கணக்கில் நூற்றுக்கு நூறு
வாங்கி என்ன பயன்.
உன்னை கணக்கு பண்ண
முடியாமல் கனத்து போகிறேனே.

 

Tamil funny love kavithai

 

உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லையென்றாலும், ஒரு காதல் கவிதை சொன்னால் அந்த உணர்வுகள் புரியும். இந்த காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaikal உங்கள் காதலை மென்மையாக வெளிப்படுத்த, உங்கள் மனதின் ஓசையை பகிர ஒரு அழகான வழியாக அமையும். காதல் வரிகள் நெஞ்சை நனையச் செய்பவை!

abhi

Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.

Leave a Reply