Skip to content

likeMYstatus

Menu
Menu

தமிழ் காதல் கவிதைகள் – Best Kadhal Kavithaigal 2024

Posted on November 10, 2024July 13, 2025

உன்னோடு சேர்ந்தே
இந்த உலகை ரசித்திட ஆசை.
உன் பூ கரம் பிடித்தே
இந்த உலகை சுற்றிட ஆசை.
உன் இன் முகம் பார்த்தே
அந்த நிலவை ரசித்திட ஆசை.
உன் மடி சாய்ந்தே
என்னை மறந்திட ஆசை💕💘.

Tamil love kavithai

Kadhal Kavithaigal

கண்கள் இமைக்க மறக்கிறது.
இதயம் விரிந்து சுருங்குகிறது.
யார் எண்ணையோ
கைபேசியில் தேடும் போது.
உன் எண்ணை கண்டதும்.

Tamil love quote


என் இதய கதவுகள் உனக்காக திறந்தேயுள்ளது.
என் விழி வீட்டினுள் நுழைந்துவிடு.
ஏற்கனவே நுழைந்து விட்டாய்,
உன் சம்மதம் இன்றி என் விழி வீட்டில்.
நீ சம்மதம் தருவாயா.?
கனவுலகில் நாம் இணைந்தே பயணிக்கலாம்.

Tamil kavithai for girlfriend


எனக்கு அப்படி வாழ வேண்டும்
இப்படி வாழ வேண்டும் என்ற
ஆசை எல்லாம் இல்லை.
ஒற்றை ஆசை தான்! வாழ்ந்தால்!
உன்னோடு வாழ வேண்டும்💕…!

Tamil love quote


எல்லை கடந்த பயங்கரவாதம்
உன் கண்கள் செய்கிறதே.
தொல்லை கொடுத்து,
தூக்கம் துரத்தி, என் உயிரை
மெதுவாய் கொய்கிறதே.

Tamil Kadhal kavithai


வண்ணம் மாறா மயிலிறகாய்.
என் எண்ணமெல்லாம் நிறைந்தவளே!
வருடுகிறாயே என்
மனதை உன் நினைவுகளால்!

Tamil Kadhal Kavithai


இரும்பு சிறையில் இருந்துகூட
எளிதில் தப்பி விடுவேன்.
ஆனால் அவள் விழி சிறையில்
இருந்து தப்பிக்க முடியவில்லை.

Tamil love quote

தமிழ் காதல் கவிதைகள்

காதல் என்னும் கடலில் கரை
அறியாது தத்தளிக்கிறேன்.
என் அன்பு காதலியே கலங்கரை
விளக்காக கரை சேர வழிகாட்டு!

Kadhal status image


என்னை வதைத்து சிதைக்கிறது.
உரையாடலின் போது
நீ சொல்லும் “ம்ம்ம்” “ம் ஹும்”
என்ற பதில்கள்.

Tamil love Kavithai

கண்ணில் தெரியும் நவரசம்.
கைகள் பிடிக்கும் அபிநயம்.
இதழில் ஊறுது கனிரசம்.
ஏனடி நடையில் அவசரம்.
வேண்டும் உன் மலர் கரம்.
பெற்றிடத்தானே என் தவம்.

Tamil Kadhal kavithai


பெண்களுக்கு அழகு வீரமாம்!
அது எப்படி சாத்தியமாகும்?
உன் கண்கள் என்னும் தூண்டில்
விழுந்து விட்டால்!
மாவீரனும் மண்டியிட்டு தானே
ஆகவேண்டும்!

Tamil kadhal kavithai


அதென்னவோ தெரியவில்லை!
உன்னைக் காணாத போது
சொல்லுவதற்கு காவியம் படைக்கிறேன்.
கண்டுவிட்டால் தமிழின் முதல் எழுத்தும் மறக்கிறேன்!

Tamil Kadhal status


பகல் கொள்ள என்பது இதுதானோ.
இத்தனை கவனமாக இருந்த
என் இதயத்தை,
பட்ட பகலில் திருடிவிட்டாய்யடி நீ.

காதல் கவிதை


என் காதலை மட்டும்
நீ சுமந்தால் போதும்.
உன்னை என்றும்
நான் சுமப்பேன்
என் உயிராக.

Tamil kadhal kavithai


நான் ஒன்றும் கவிஞன் இல்லை.
உன்னை பார்த்த பின்பு தான்
ஏனோ இப்படி ஆகி விட்டேன்🖋️.

LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com

abhi
abhi

Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

©2025 likeMYstatus | WordPress Theme by Superbthemes.com